×

ரதுல் மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் சகோதரியின் மகன் ரதுல் புரி மீது, அமலாக்கத் துறை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில் தொடர்புடைய ரதுல் புரி மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அவர் கடந்த செப்டம்பர் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். முன்னதாக, ₹ 345 கோடி வங்கி நிதி மோசடி வழக்கு தொடர்பாக ரதுல் புரி, அவரது தந்தை, தீபக் புரி, தாய் நீட்டா உள்ளிட்ட 5 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்த சிபிஐ, ரதுல் புரியை கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி கைது செய்தது.

Tags : Ratul, Department of Enforcement, Charge Sheet
× RELATED ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுடன் டெல்லி முதல்வர் ஆலோசனை